நீர் நிரம்பிய பானையில் தவறி விழுந்து பலியாகிய குழந்தை

0

இலங்கையில் கலேவெல பகுதியில் ஒரு வருடமும் 8 மாதம் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வீட்டின் பின்னால் தண்ணீர் நிரப்பிவைக்கப்பட்டிருந்த பானையொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவஹூவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று பிற்பகல் 4.10 மணியளவில் தண்ணீர் நிரப்பப்பட்ட பானையொன்றில் குழந்தையொன்று விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உயிரிழந்த குழந்தை தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் தாத்தாவின் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

வீட்டின் பின்னால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, குறித்த தண்ணீர் பானையில் தண்ணீர் எடுக்க முற்பட்ட போது இவ்வாறு பானைக்குள் வீழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் கவனக் குறைவின் காரணமாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் குழந்தையின் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here