கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையினை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையினை தொடர்ந்து பல அரச தரப்பு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சற்றுமுன் நீர்கொழும்புப் பகுதியில் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலை தொடர்ந்து நீர்கொழும்பு பொதுவைத்தியசாலையில் காயமடைந்த 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டீன் சந்தியில் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இனமத குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் குழுவொன்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் இலாபத்திற்காக சிலர் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள காணொளியில் வெளியாகியுள்ளது.