வெல்லவாய பொலிஸ் அதிகாரப்பிரிவின் எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்று உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் இருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி நீர்வீழ்ச்சியை பார்வையிட மற்றும் நீராட ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய தந்தை, 15 வயதுடைய மகன் மற்றும் 11 வயதுடைய மகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தந்தை மற்றும் மகனுக்கு தொற்று இருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.