நீராடச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த கதி…!

0

இலங்கையில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரவிபாஞ்சான் குளத்திற்கு இரு சிறுவர்கள் இன்று காலை நீராடச் சென்றுள்ளனர்.

தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை- ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சஹ்தீன் (13 வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை – 95 சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (13வயது) என்ற சிறுவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு நீராடச் சென்றபோது, இவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here