நீண்ட தாமதத்திற்கு பின் ஓடிடியில் வெளியாகும் த்ரிஷா படம்!

0

த்ரிஷா நடித்த திரைப்படம் ஒன்று கடந்த 2019ஆம் ஆண்டே வெளியாகியிருக்க வேண்டிய நிலையில் நீண்ட தாமதத்துக்குப் பின் தற்போது ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

த்ரிஷா நடிப்பில் திருஞானம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் 2019 ஆம் ஆண்டே முடிந்துவிட்டன. அதன் பின் ஒரு சில ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேதிகளில் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இரண்டு வருடத்திற்கு பின் இந்த படம் வரும் 14ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் ஹாட்ஸ்டாரிலும் இந்த படம் த்ரிஷாவின் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

paramapathamநீண்ட தாமதத்திற்கு பின் ஓடிடியில் வெளியாகும் த்ரிஷா படம்!
த்ரிஷா, நந்தா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார். 24 ஹவர்ஸ் புரோடக்சன்ஸ் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here