நில்வள கங்கையில் நீராடச் சென்ற நாலவருக்கு நேர்ந்த கதி….

0

இலங்கையில் நில்வள கங்கையில் 26 ஆம் திகதி நீராடச் சென்ற நிலையில் நால்வர் காணாமல்போயிருந்தனர்.

அதில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம், மாத்தறை – பிட்டபெத்தர பகுதியில் நில்வள கங்கையில், 12 பேர் கொண்ட குழுவினர் நீராடச் சென்ற நிலையில் நால்வர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.

இதையடுத்து, காணாமல்போனவர்களை மீட்கும் பணிகளை, கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இநநிலையில், ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here