அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) டெலவெயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லத்தின் அருகே “சைக்கிளிங்” செய்துள்ளார்.
தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன்(Joe Biden) சென்று கொண்டிருந்தார்.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது, நிலை தடுமாறி ஜோ பைடன்(Joe Biden) கீழே விழுந்தார்.
எனினும், உடனடியாக எழுந்த ஜோ பைடன்(Joe Biden) தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஜோ பைடனுக்கு(Joe Biden) காயம் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
