நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்கள் மாயம்…

0

திருகோணமலை – நிலாவெளி கடலில் நீராடச் சென்று காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன மேலும் ஒருவரை தேடி, மீட்பு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நிலாவெளி கடலில் நீராடுவதற்கு 7 பேர் சென்றிருந்த நிலையில், அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களில் இரண்டு பேர் காவற்துறையினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவர் மாயமாகிய நிலையில் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட மற்றும் காணாமல் போன இளைஞர்கள் யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேசத்திலுள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here