நிலவில் மனிதர்களால் வசிக்க முடியும்….! நாசா அறிவிப்பு

0

அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆர்ட்டெமிஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்கால மனிதர்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள இது வழி வகுக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டானது மனித உடலின் மாதிரி ஒன்றை எடுத்துச் செல்வதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

அது ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்வாக கண்டிப்பாக இருக்கும் எனவும் நாசா தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியானது அமெரிக்காவுக்கானது மட்டுமல்ல.

மொத்த உலக நாடுகளுக்குமான முயற்சி என Howard Hu என்ற நாசா வல்லுநர் குறிப்பிட்டுள்ளார்

Howard Hu என்ற நாசா வல்லுநர் தெரிவிக்கையில்,

நாம் மீண்டும் நிலவில் காலடியெடுத்து வைக்க இருக்கிறோம்.

இந்த வாகனமானது மக்களை நிலவுக்கு கொண்டு செல்ல இருக்கிறது.

மொத்த திட்டமும், மக்களை நிலவில் வசிப்பதற்கான முயற்சி ஒன்று ஆகும்.

ஒரு புதிய விண்வெளி நிலையத்தை நிலவில் நிறுவி, விண்வெளி வீரர்கள் வாழவும் வேலை செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது தான் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here