நிர்வாணமாக வீடியோ அழைப்பில் சிக்கிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்!

0

இந்தியாவில் பெங்களூரை சேர்ந்த அவினாஷ் வயது 24 சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் அவினாஷ் சகோதரர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு உள்ளார் எனவும் அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் விசாரணை நடந்த நிலையில் அவினாசை ஹனிடிராப் கும்பல் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது.

இதுதொடர்பாக 2 பேரை பொலிசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

எம்.பி.ஏ. பட்டதாரியான அவினாசுக்கு, முகநூலில் நேகா சர்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது.

இதனால் அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர்.

மேலும் 2 பேரும் ஆபாசமாக பேசி வந்ததுடன், நிர்வாணமாக வீடியோ அழைப்பிலும் பேசி இருந்ததாக தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் அவினாஷ் நிர்வாணமாக வீடியோ அழைப்பில் பேசும் காட்சிகளை, நேகா சர்மா வீடியோ எடுத்து வைத்திருந்ததாக தெரிகிறது.

அந்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி அவிநாசிடம், நேகா சர்மா பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் பயந்து போன அவினாஷ் ரூ.21 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்.

ஆனாலும் அவரிடம் மேலும் ரூ.30 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பயந்து போன அவினாஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்தமை வெளிவந்துள்ளது.

தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here