துபாயில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்போ அல்லது ஹோட்டலிலோ பல பெண்கள் நிர்வாணமாக பால்கனியில் நின்று போஸ் கொடுப்பது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கடந்த சனிக்கிழமை முதல் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பக்கத்து கட்டிடத்தில் வசிக்கும் நபர் எடுத்ததாக நம்பப்படுகிறது.
இது ஒரு விளம்பரத்திற்காக இருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுவில் முத்தமிடுவது அல்லது உரிமம் இல்லாமல் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள்
இதனால் நிச்சயமாக இது ஒரு விளம்பரத்திற்காக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோ வைரலானதால், துபாய் பொலிசார் அந்த வீடியோவில் இருக்கும் கட்டிடம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்,
இதையடுத்து கண்டுபிடித்த துபாய் பொலிசார், அநாகரீகமாக பொதுவெளியில் நடந்து கொண்டதாக கூறி, அவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பெண்கள் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது ஒழுக்க சட்டங்களை மீறியதற்காக சுமார் 1,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.