நியூ யார்க் நகரத்தை அச்சுறுத்தும் குரங்கம்மை

0

நியூயார்க் நகரத்தில் குரங்கம்மை தொற்றானது அதி தீவிரமடைந்துள்ளது.

இதுவரை குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,600 ஆகும்.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தேசிய அளவிலான நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

எனினும் தொற்று அதிவேகமாகப் பரவிவரும் நிலையில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் வசிக்கும் பலரிடையே, குரங்கம்மைத் தொற்றுக் குறித்துக் குழப்பம் நிலவுகிறது.

அத்துடன் அங்கு தடுப்பூசிகளும் தகவல்களும் போதுமான அளவில் இல்லை.

அவ்வாறு இருந்திருந்தால் நோய்ப்பரவல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஏமாற்றமும் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here