பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள நியூ கலிடோனியா தீவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம், நௌமியா தீவில் கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது.
நியூ கலிடோனியாவின் கிழக்கே 407 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நியூ கலிடோனியாவின் டாடினில் ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கடும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.