நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்…. 10 பேர் பலி

0

அமெரிக்காவின் நியூயோர்க் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரது பெயர் விபரங்கள் காவல்துறையினரால் வெளிப்படுத்தப்படவில்லை.

சந்தேகநபர் நேற்று வர்த்தகம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு நுழைந்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதோடு அதனை நேரலையாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் எஃப்.பி.ஐ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இனவாத வெறிச் செயலாக இதனை கருதுவதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் குறித்த பகுதியை சேர்ந்தவர் இல்லை.

அவர் நீண்ட தூரத்தில் வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பஃப்பலோ நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here