நியூயோர்கில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடு நீக்கம்…?

0

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் பாடசாலைகள், உள்ளக அரங்குகள் உள்ளிட்ட சில இடங்களில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டை நீக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7 ஆம் திகதிக்குள் கொவிட் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகும் என நம்பப்படுகின்றது.

அதனை தொடர்ந்து இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகர முதல்வர் எரிக் ஆடம்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி பாடசாலைகள், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாட்டை நீக்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தொற்றுநோய் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவது என்பது ஓர் ஆபத்தான விடயமாகும்.

எனினும் நகரத்தின் இயல்பு நிலையை மீட்டெடுக்க மற்றும் அதன் பொருளாதார மீட்சியை அதிகரிக்கவும் உதவும் என பலர் நம்புவதனால் இந்நடைமுறையை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here