நியூயோர்க் குடியிருப்பு கட்டிடத்தில் பாரிய தீ விபத்து

0

நியூயோர்க்கின் குயின்ஸில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடமொன்று தீப் பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் தீப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் 350 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 8 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டு வருகின்றது.

இந்த கட்டிடத்தில் சுமார் 150 குடியிருப்புகள் உள்ளதுடன், விபத்தினையடுத்து 90 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஆரம்பத்தில் ஏற்பட்டுள்ளதுடன், அது ஏனைய குடியிருப்புகளுக்கும் விரைவாக பரவியுள்ளது.

எனினும் தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here