நியூயார்க்கில் கடுமையாக வீசும் பனிப்புயல் – இருளில் மூழ்கிய நகரங்கள்

0

அமெரிக்காவின் மேற்கு நியூயார்க் பகுதியில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகின்றது.

வாகனங்கள், வீடுகள் பனியால் மூடப்பட்டுள்ளது.

சாலைகளில் இரண்டு அடி உயரம் வரை பனி கொட்டிக்கிடக்கிறது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

பனிப்புயலால் பஃபலோ நயாகரா சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் நாளைக்குள் தரையில் நான்கரை அடி உயரம் வரை பனிப்பொழிவு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here