நியூசிலாந்தை உலுக்கிய காத்தான்குடி ஆதில் தொடர்பில் வெளியான மேலதிக தகவல்கள்!

0

நியுசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள லைன் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முகமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989 ம் ஆண்டு கடைசி மகனானபிறந்தவர் முகமது சம்சூதீன் ஆதில் அவருக்கு சகோதரியும் 2 இரண்டு சகோதரன்களும் உள்ளனர் .

ஆதில் ஆரம்ப கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக 1998 ம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது அவரது குடும்பத்தினர்இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் வாழ்ந்துள்ளனர்

இந்த நிலையில் ஆதில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006ம் ஆண்டு பரிட்சை எழுதிய பின்னர் 2011 ம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளார்.

. இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையற்றி வந்து நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருதுடன் அவருடன்கனடாவிற்கு சென்று குடியேறி வாழந்துவருகின்றார்.

அதேவேளை ஒரு சகோதாரன்; கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்துவருதாகவும் அடுத்த சகோதரன் சவூதியில் இருப்பதாகவும் கொலன்னாவையில் சொந்த வீட்டை வாடகைக்கு தாயார் கொடுத்துவிட்டு தமது காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் தாயார் வசித்துவருகின்றார்எ ன பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பா அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here