நியூசிலாந்து செல்ல காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

0
Flanked by lawmakers, New Zealand Prime Minister Jacinda Ardern delivers a speech on Thursday, Aug. 12, 2021, in Wellington, New Zealand. Ardern announced plans to begin a cautious reopening of New Zealand's borders to international travelers from early next year. (AP Photo/Nick Perry)

நியூசிலாந்து கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக அந்நாடு உலகிலிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தது.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட தமது எல்லைகளை சுமார் 2 வருடங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்காக நியூஸிலாந்து மீள திறக்கவுள்ளது.

வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்க நியூசிலாந்து தயார் என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயணிகளுக்கு அந்நாடு ஒரு பாதுகாப்பான அனுபவத்தைத் தரும் என தாம் நம்புவதாக ஆர்டன் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் 13 ஆம் திகதி முதல் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தலின்றி நாட்டிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் நியூசிலாந்து அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் விசா தள்ளுபடி பெற்ற பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகளைச் சேர்ந்த முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட பயணிகளுக்கு எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் அனுமதி வழங்கப்படுகின்றது.

எனினும் அனைத்து பயணிகளும் பயணத்துக்கு முன்னும், நியூசிலாந்தைச் சென்றடைந்தவுடன் பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும்.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern), பயணிகளின் வருகை நாட்டின் சுற்றுலாத் துறையைத் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here