நியூசிலாந்தில் பலர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் சுட்டுக்கொலை!

0

நியூசிலாந்தில் ஆக்லாந்தில் வணிக வளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை காயப்படுத்திய இலங்கையரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

லைன்மோலில் இடம்பெற்ற இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து பெரும் பதற்ற நிலை காணப்பட்டது என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இது தீவிரவாத தாக்குதல் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆடன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்டிருந்த அவரின் பெயரை வெளியிட நியூசிலாந்து விரும்பவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ள இந்த நபர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியவராக கருத்தப்பட்டுள்ளார்.

தீவிர கண்காணிப்பு வலயத்தில் இருந்தபோதே இவர் இன்று மக்கள் மீது தாக்குதலை நடத்தி 6 பேரை படுகாயமடைய செய்துள்ளார்.

கத்திக்குத்து காயத்துடன் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடைப்பதை நேரில் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

வணிக வளாகத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வெளியே ஓடுவதைக் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் பலரை காயப்படுத்தினார் பொலிஸார் அவரை கண்டுபிடித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதில் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவரின் நிலைமை ஆபத்தானதாக காணப்படுகின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்தின் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here