நியூசிலாந்தில் வடக்குத் தீவுக்கருகே நேற்றைய தினம் ரிக்டர் அளவீட்டு கருவியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் உணரப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியை அண்மித்த கடற்பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதுடன்,சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியை அண்மித்த இடங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.