நியூசிலாந்தில் இரண்டாம் மொழியாக தமிழ் மொழி பரிந்துரை

0

நியூசிலாந்தில் இயங்கிவரும் தமிழ் மொழிக்குழுவானது கல்வித்துறையின் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக பயிற்றுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் மவுண்ட் ரோஸ்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் மைக்கல் உட் முன்னிலையில், அண்மையில் விளக்கக் காட்சி ஒன்றை தமிழ் மொழிக்குழு முன்வைத்துள்ளது.

போக்குவரத்து, அலுவலகத் தொடர்பு மற்றும் மனிதநல பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர் மைக்கல் உட், நியூசிலாந்து நாட்டில் இயங்கிவரும் தமிழ் சார்ந்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைவத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழியை நியூசிலாந்து பாடத்திட்டத்தில் இணைப்பது குறித்த விளக்கக் காட்சி ஜுன் 11, 2021 அன்று அமைச்சர் உடனான சந்திப்பில் விளக்கப்பட்டுள்ளது.

இவ்விளக்கக்காட்சி அமைச்சர் மற்றும் நியூசிலாந்து தமிழ் மொழி குழுவிற்கு திருப்தி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வமைப்பு அமைச்சர் அவர்களை இக்குழுவின் கௌரவ ஆலோசகராகப் பணியாற்ற கேட்டுக்கொண்டதற்கு அமைய அவர் ஒப்புதல் அளித்ததற்கு தமிழ் மொழிக்குழு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here