நிபா வைரஸ் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

நிபா வைரஸ் கொரோனாவை விட அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.

நிபா வைரஸால் கேரளாவில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மேலும், கேரளாவின் சில பகுதிகளில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில், முக்கிய குழு இறந்த குழந்தையின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பழங்களின் மாதிரிகளைச் சேகரித்து, அது குறித்த மேலதிக ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பு மருந்துகள் இல்லாததால் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கூறி உள்ளது.

மேலும், நிபா வைரஸின் அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது சவால் நிறைந்ததாக இருந்தாலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுக்கும் விதமாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், நிபா வைரஸ் கொரோனா வைரஸை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், இது உலகளாவிய நோய் தொற்றாக மாறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here