நாளை பதவி விலகுவாரா மஹிந்த ராஜபக்ஷ?

0

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் நாளை இடம்பெறும் என உயர் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பதவி விலகிய பின்னர் பிரதமர் அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் எதிர்பாரக்கப்படுகின்றது.

அரசமைப்பின் படி பிரதமர் பதவி விலகுவது என்பது முழு அமைச்சரவையும் பதவி விலகுவதாகும், அவ்வறான சூழ்நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்கவேண்டும் எனினும் இடைக்கால அரசாங்கம் குறித்த நிச்சயமற்ற நிலை காரணமாக யார் புதிய அமைச்சரவை யாரை பிரதிநிதித்துவம் செய்யும் என்பது முக்கிய கேள்வியாக காணப்படுகின்றது.

இதுவரை பிரதமர் தான் பதவி விலகப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தன்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொள்ள மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்,பிரதமரின் மகனும் அவரது பிரதானியுமான யோசித ராஜபக்ச அவருக்கு இந்த விடயத்தில் பெரும் ஆதரவை வழங்குகின்றார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here