நாளைய மின்வெட்டு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு!

0

நாளைய தினம் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் நாளை (5) இரவு நேரத்தில் மாத்திரம் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலாகுமென அவ்வாணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை, நீர் வளப்பற்றாக்குறை மற்றும் அனல் மின்நிலைய மின்பிறப்பாக்கி செயலிழப்பு போன்ற விளைவுகளால், போதிய மின் உற்பத்தியின்மை காரணமாக மின்சார விநியோகத்தை முகாமை செய்வதற்கு, மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துவருகிறது.

சில வாரங்களின் பின்னர் நேற்றுமுன்தினம் (2) நீர் மின் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் 40% நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

நேற்றுமுன்தினம் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 57.17% நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள், கடந்த சில காலங்களில் பெய்த மழையினால் நிரம்பியுள்ளதால் எதிர்வரும் நாட்களில் மின்வெட்டு காலத்தை குறைக்க முடியும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here