‘நாய் சேகர்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு

0

நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் இப்படத்திற்கு அதையே தலைப்பாக வைக்க உள்ளார்களாம். சுராஜ் – வடிவேலு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here