நாமல் வழங்கிய பதவியை இராஜினாமா செய்தார் பாடகர் இராஜ்

0

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தனக்கு கிடைத்த பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியையே அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்த கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கு புதிய உறுப்பினர்களாக இராஜ் வீரரத்னவும், தெஹானி இமாராவும் கடந்த வருடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here