நான்கு வயது குழந்தையைக் கொன்ற கொடூரப் பெண்ணிற்கு விடுதலை

0

ரஷ்யாவில் 2016ஆம் ஆண்டு, Anastasia Meshcheryakov (4) என்ற குழந்தையை கவனித்துக்கொள்ளும் பணியிலிருந்த Gyulchekhra Bobokulova (43) என்ற பெண், அந்த குழந்தையைக் கொலை செய்து, அதன் தலையைக் கையில் எடுத்துக்கொண்டு, அல்லாஹூ அக்பர் என கத்தியபடியே சாலையில் சென்றுள்ளார்.

மேலும் Bobokulova பொலிசார் வந்தபோது, தான் ஒரு தீவிரவாதி என்றும், தன்னிடம் வெடிகுண்டு உள்ளதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் பொலிசார் அவரைக் கைது செய்யும்போது, தரையில் அந்த குழந்தையின் தலை உருளும் காட்சிகள் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தன.

Bobokulovaவுக்கு மன நல பாதிப்பு என்று முடிவு செய்த நீதிமன்றம், அவரை மன நல மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது Bobokulova விடுதலை செய்யப்படவுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அவரை விடுதலை செய்வதற்கு கொலை செய்யப்பட்ட Anastasiaவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர் Anastasiaவை கொலை செய்ததுடன், தங்கள் குடும்பம் முழுவதையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சிரியாவில் குண்டு வீசியதற்கு பழி வாங்கவே தான் குழந்தையைக் கொன்றதாக Bobokulova தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here