நான்கு மாத குழந்தையை வனப்பகுதியில் வீசி எறிந்த இளம்பெண் கைது

0

அமெரிக்காவில் நேற்று காலை 8.35 மணியளவில், பெண் ஒருவர், தன்னை யாரோ துப்பாக்கியுடன் துரத்துவதாகக் கூறி வனப்பகுதிக்குள் ஓடியுள்ளார்.

அவர் கையில் குழந்தை ஒன்று இருப்பதைக் கண்ட அந்த பகுதி மக்கள், அதுகுறித்து உடனடியாக கலிபோர்னியாவின் Oakland பகுதி பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

புதர் ஒன்றிற்குள் மறைந்திருந்த அந்த பெண்ணைக் கண்டுபிடித்த பொலிசார், அவரது கையில் குழந்தை இல்லை என்பது தெரியவந்ததும் குழந்தையைத் தேடும் முயற்சியில் இறங்கினர்.

அதற்காக 13 பொலிஸ் வாகனங்களில் புறப்பட்ட பொலிசார், மோப்பநாய்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் அப்பகுதியில் தேடத்தொடங்கினர்.

சிறிது நேரத்தில் Orion பகுதியிலுள்ள வனப்பகுதியில், நதி ஒன்றின் அருகே முகங்குப்புற கிடந்த நான்கு மாதக் குழந்தையை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.

அந்த அணியின் தலைவரான Mike Bouchard என்ற பொலிஸ் அதிகாரி கூறும்போது, குழந்தை குளிரால் hypothermia என்ற பிரச்சினையால் அவதியுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது..

இதற்கிடையில், அந்த குழந்தையின் தாய் கூறிய விடயங்களில் உண்மை இருப்பதுபோல் தெரியவில்லை என்று பொலிசார் கூறியுள்ளனர்.

குழந்தையை அபாயகரமான நிலையில் வனப்பகுதியில் அவர் விட்டுவந்ததால், அந்த 37 வயது பெண்ணை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here