நான்காவது மாடியிலிருந்து விழுந்த 5 மாணவர்கள் பலி….!

0

பொலிவியா பல்கலைக்கழகத்தில் அதிக நெரிசல் காரணமாக, பால்கனியின் தடுப்புக் கம்பி உடைந்து நான்காவது மாடியிலிருந்து மாணவர்கள் கீழே விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 8 பேர் வரை கீழே விழுந்துள்ளனர்.

அதில் 3 மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு பொலிவியாவில் உள்ள Public University of El Alto (PUEA) பல்கலைக்கழகத்தில், நிதி அறிவியல் துறைக் கட்டிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
அங்கு மாணவர்கள் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூடியிருந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here