நாட்டு மக்களின் நெருக்கடியை தீர்க்க பிரதமர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்தன, அகிலவிராச் காரியவசம், சாகல ரத்நாயக்க மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் தேவைப்பாடு, உரப்பற்றாக்குறை, ஒளடதங்கள் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் ஆராய்வதற்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக குறிப்பிட்ட துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகஐக்கிய தேசிய கட்சியின் வஜிரஅபயவர்த்தனவையும் பாலித ரங்க பண்டாரவையும் பிரதமர் நியமித்துள்ளார்.

மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக ருவான் விஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

உரங்கள் தொடர்பில் அகிலவிராஜ் காரியவசம் பேச்சுவார்ர்தைகளை மேற்கொள்வார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் சாகல ரட்நாயக்க பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here