நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை: 21 பேர் இறப்பு, 43,890 குடும்பங்கள் பாதிப்பு

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் குருநாகல் (2), கேகாலை (5), களுத்துறை (3), புத்தளம் (2), கொழும்பு (1), இரத்தினபுரி (3), காலி (1) மற்றும் கம்பஹா (4) மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பத்து மாவட்டங்களில் 43,890 குடும்பங்களைச் சேர்ந்த 272,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சீரற்ற வானிலை காரணமாக ஐந்து பேர் காயமடைந்துள்ளதுடன் இரண்டு பேரைக் காணவில்லை என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அந்த அறிக்கையின்படி, 21 வீடுகள் முற்றிலுமாகவும் 1,095 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ள அதேவேளை 694 குடும்பங்களைச் சேர்ந்த 2,689 பேர் 60 பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here