நாடு முழுவதும் மின்வெட்டு இன்றைய நேர எல்லை அறிவிப்பு

0

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதை மாற்றியமைக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அதற்கமைய, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் 2 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை 8.30 மணி முதல் இரவு 5.30 மணி வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் குறித்த காலப்பகுதியில் தென் மாகாணத்தில் மாத்திரம் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு, உயர் தரப்பரீட்சை இடம்பெறும் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரையான காலப்பகுதியிலும் மின் மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்காக இரவு நேரத்தில் மின்வெட்டை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகிறதெனவும் அவர் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here