நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு

0

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத் திடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்தே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடமையாற்றும் அரச பணியாளர்கள் அனைவரையும் அரைநாள் விடுமுறையுடன் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.

கொழும்பில் ஏற்பட்ட வன்முறைகள் ஏனைய இடங்களுக்குப் பரவாமல் இருப்பதற்காக இன்று இரவு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here