நாடு முடக்கத்திற்கு தயாராகிறது – GMOA எச்சரிக்கை

0

தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளது என அரச மருத்து அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொவிட் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கமும் பொறுப்புடைய தரப்பினரும் உடன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அவ்வாறு அல்லாத பட்சத்தில் நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம்.

சுகாதார வழிகாட்டி ஒன்று இருக்கிறதே தவிர, அது அரச மற்றும் தனியார்த் துறையினரால் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை.

மக்கள் இந்த விடயத்தில் இருக்கின்ற அபாய நிலையைப் புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றனர்.

மக்களுக்கான சுகாதார அமைச்சு போதிய விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here