நாடு திறக்கப்படுமா? இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

0

கொவிட்-19 கட்டுப்படுத்தல் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடு விரைவில் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நாடு மீண்டும் திறக்கப்பட்டால் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய கொவிட்-19 தடுப்பு பணிக்குழுவுக்கு அறிவுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணியின்போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் வேகமான பரவல் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பலமுறை நீடிக்கப்பட்டு செப்டெம்பர் 21 அதிகாலை 4.00 மணிவரை அமுலில் உள்ளது.

இந் நிலையில் நாடு முழுவதும் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களில் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here