நாடாளுமன்றத்தில் சொன்னதை ஊடகங்களுக்கு சொல்ல முடியுமா? சுமந்திரனுக்கு டக்ளஸ் சவால்

0

வடக்கில் தொழிலில் ஈடுபடும் 500 இழுவை வலை படகுகளிடமிருந்தும் நான் ஓர் இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபாய் கப்பமாக பெறுவதாக சுமந்திரன் எம். பி. தனது சிறப்புரிமையை பயன்படுத்தி இந்த சபையில் கூறியிருந்தார்.

அவர் முடியுமானால் இந்தக் கருத்தை பொதுவெளியில் ஊடகங்களுக்கு சொல்ல முடியுமா என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சவால் விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்ககிழமை கடற்றொழில் அமைச்சு மீதான திருத்தங்கள், தெளிவுபடுத்தல்களை முன்வைக்கும்போதே இவ்வாறு சவால்விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

இந்த சபையில் நான் இல்லாத நேரம் இரு எம்.பிக்கள் எனது பெயரை இரு விடயங்களோடு சம்பந்தப்படுத்தியிருக்கின்றார்கள்.

அதில்முதலாவது சுமந்திரன் எம்.பி. இரண்டாவது அனுரகுமார திஸாநாயக்க. முதலாவது சுமந்திரனின் அந்த பேச்சை ஹன்சாட்டிலிருந்து அகற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனெனில் அது முற்றிலும் பொய்யானது. அவர் வெளியில் ஒரு கதையையும் நாடாளுமன்றத்தில் தந்து சிறப்புரிமையை பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் 500இற்கும் மேற்பட்ட இழுவை வலைப் படகுகள் இருக்கின்றன. இவற்றிடமிருந்து, நான் ஓர் இரவுக்கு ஒரு படகிடமிருந்து 5000 ரூபாய் கப்பமாக பெறுவதாகவும் அதனால் தான் அது அனுமதிக்கப்படுவதாகவும் சுமந்திரன் எம். பி. தனது சிறப்புரிமையை பயன்படுத்தி இந்த சபையில் கூறியிருந்தார்.

இதற்கு அந்த கிராமத்து மக்கள் சுமந்திரனுக்கு தகுந்த பாடத்தை படிப்பித்திருந்தார்கள். அந்தக் கிராமத்தில் ஹர்த்தால் நடத்தி சுமந்திரனின் உருவ பொம்மையையும் எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் எதனையும் வாந்தி எடுக்கலாமென சிலர் நினைக்கின்றனர். பொதுவெளியில் நாளை அவர் இந்த கருத்தை ஊடகங்களுக்கு சொல்வாரா என நான் வெளிப்படையாக அவரிடம் கேட்கின்றேன். அப்படி சொல்வாராக இருந்தால் நான் நீதிமன்றத்தின் மூலம் அது தொடர்பான உண்மையை நிரூபிக்க முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here