நாடளாவிய ரீதியில் இன்றும் 7 1/2 மணிநேர மின்வெட்டு அமுல்

0

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் 7 மணித்தியாலம் 30 நிமிடம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில் 5 மணிநேர மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, எரிபொருள் உரிய வகையில் கிடைக்காத நிலையில் இன்று முதல் பயணிகளுக்கான போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்படுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here