நாடளாவிய ஊரடங்கு நாளை மறுதினம் வரை நீடிப்பு!

0

நாடளாவிய ரீதியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எழுத்துமூலம் அனுமதியின்றி, ஊரடங்கும் காலப்பகுதியில் மேற்படி இடங்களில் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here