நாசாவில் கடமையாற்றிய ஈழத்தமிழ் விஞ்ஞானி உயிரிழப்பு

0

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார்.

இவர் நேற்று 17 ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

வைத்திலிங்கம் துரைசாமி 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர்.

அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.

கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார்.

இந்நிலையில்யாழ்ப்பாணம் – குப்பிளான் மண்ணின் பெருமையும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது உலகத்தமிழர்களின் பெருமையும் அமெரிக்க நாசா விண்வெளியில் பணியாற்றி பெருமை சேர்த்த ஈழத்தமிழ் விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here