நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது

0

இந்தப் பாரம்பரியத்தின் பண்டிகைகளில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது நவராத்திரி திருவிழா. மகிஷாசுரனுடன், அம்பாள் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெறுவார்.

இந்த ஐதீகத்தின் படி ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன் இறுதி நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.

இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களையும் நன்றாக சுத்தம் செய்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

இதன் முக்கிய நிகழ்வாக வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். தினமும் காலையும் மாலையும் இந்த கொலுவின் முன்பு கோலமிட்டு விளக்கேற்றி மலர்கள், படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.

இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடையில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்வார்கள்.

நவராத்திரி விரதத்தை மேற்கொள்வோருக்கு விரும்பியது ஈடேறும் என்பதும், முப்பெரும் செல்வங்களான கல்வி செல்வம் வீரத்தை அடைவார்கள் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது. இனி வரும் ஒன்பது நாட்கள், அதனைத் தொடர்ந்து விஜயதசமி வழிபாடு என அடுத்த பத்து நாட்களும் வீடுகளில் விரதம் மற்றும் கொலு வழிபாடு என்று பக்தி பெருக்கெடுத்து ஓடும். இந்துக்கள் அனைவரும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here