நவம்பர் 1-ம் திகதி முதல் ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி

0

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியர்கள் நவம்பர் 1 முதல் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மனித உயிர் பாதுகாப்பு நிர்ணயச் சட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாட்டிற்கு போவதை கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 2 தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் நவம்பர் 1-ஆம் தேதி தாராளமாக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளலாம். இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார மந்திரியான கிரேக் ஹண்ட் கூறியபோது “ஆஸ்திரேலிய குடிமக்களும், நிரந்தர குடியுரிமை பெற்றவர்களும் வெளிநாட்டிற்கு செல்ல விரும்பினால் 2 தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை சிகிச்சை பொருட்கள் நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும்.

மேலும் அவரகள் பயணத்திற்கு குறைந்தது 1 வாரத்திற்கு முன்பாக 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது கொரோனாவின் 3-வது அலையில் உள்ள ஆஸ்திரேலியாவில் நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 1,800 நபர்களுக்கு தொற்று பாதிப்பு இருக்கிறது. அதன்பின் 16 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here