நவகிரக வழிபாடுகளும் அற்புத பலன்களும் !!

0

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்றவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

ஜோதிடத்தின் அடிப்படையில், நவக்கிரகங்களே மனிதர்கள் மீதும், உலகில் நடக்கும் நிகழ்வில் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

எந்த கோயிலுக்குச் சென்றாலும், மூலவரையும் பிற தெய்வங்களையும் தரிசித்த பிறகே, இறுதியாக நவகிரகத்தை சுற்றிவர வேண்டும். அதனால், எந்த ஒரு கோவிலுக்கு சென்றாலும், மூலவரை தரிசிக்காமல் நவகிரகங்களுக்கு மட்டும் பரிகாரம் செய்வதும் வழிபடுவதும் நிச்சயம் எதிர்பார்த்த பலனை அளிக்காது.

நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும். அதேபோல எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும்.

எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.

சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும். சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.

செவ்வாயை வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும். புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.

குரு பகவானை வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும். சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும். ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும். கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here