நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள்!

0

வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் பஞ்சராகதெய்வங்களின் தீர்த்ததோற்சவம் இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

பஞ்சராக தெய்வங்களாகிய பிள்ளையார், அலங்காரவேலன், வள்ளி,தெய்வானை, சண்டேஷ்வரபெருமான் ஆகிய தெய்வங்களுக்கு வசந்த மண்டவத்தில் இடம்பெற்ற விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று எலி, மயில், அன்னம், இடபம் ஆகிய வாகனத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து வெளிவீதியில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பஞ்சராகதீர்த்தத்திருவிழாவுடன் திருவிழா அனைத்தும் நிறைவடையும்.

இவ் மஹோற்சவத்திற்கு பலபாகங்களில் இருந்துவருகைதந்த பலரும் கலந்துகொண்டு நல்லையம்பதி அலங்காரக்கந்தனின் அருட்கடாச்சத்தினை பெற்றதுடன் நேர்த்திக்கடனைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here