நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஒருமுகத் திருவிழா

0

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஒருமுகத் திருவிழா நடைபெற்றது.

நேற்றைய தினம், வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வேல் பெருமான் பெரிய குதிரை வாகனத்திலும் வள்ளி மற்றும் தெய்வானை தலா மூன்று குதிரைகள் பூட்டிய இரு குதிரை வாகனங்களிலும் எழுந்தருளி உள்வீதி உலா வலம் வந்தனர்.

இதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா, இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கும் நாளை மறுநாள் காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here