நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 16ம் நாள் உற்சவம்

0

யாழ்ப்பாணம்- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 16ம் நாள் உற்சவம் சிறப்பாக நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அருணகிரிநாதர் உற்சவமும் சிறப்பாக நடத்தப்பட்டதாக ஆலய குருக்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய குருக்கள், சிறப்பு பூஜைகளை நடத்தியதுடன், இறைவனை வாகனத்தில் எழுந்தருளச் செய்து, ஆலய வளாகத்துக்குள்ளேயே வலம் வரச் செய்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here