நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கழிவு எண்ணெய் ஊற்றிய விசமிகள்!

0

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது.

இந்த விசமத்தனமாக செயற்பாடு சைவ மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் நல்லூரானின் தேரடிப் பகுதியிலும் நல்லூர் ஆலய முகப்பு மண்டபத்தின் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்துக்கள் புனிதமாகப் போற்றிவரும் ஆலயத்தில் விசமிகளின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், ஆலயத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here