நல்லூரானின் தீர்த்த திருவிழா இன்று!

0

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 25ஆம் நாள் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்த மகோற்சவம் பக்தர்களின் பங்கேற்பின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் இடம்பெற்று வருகிறது.

அதன்படி, இம்முறை தேர் திருவிழாவின்போது நேற்றையதினம் தேர் இழுக்காது வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் ஆரோகணித்து அருள்காட்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here