நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந் நிலையில், நேற்று காலை விநாயகர் வழிபாடு, நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு தலைமையில் சிவாச்சாரியார்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக இடம்பெற்றது.
நயினை நாகபூஷணி அம்பாளின் வருடாந்த பெருந்திருவிழா இன்று புதன்கிழமை பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் உற்சவம் நிகழவுள்ளது.