நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் அதிசயங்கள்…..!!!!!!

0

கடவுள் நம்பிக்கையற்றவர்க்கும் கடவுள் நம்பிக்கை வரவைக்கும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் அதிசயங்கள் ஓர் சிறப்புப் பார்வை…..!!!!!!

1.நாகங்கள் அதிகம் உள்ள இடத்தில் நாகப்பாம்பு தென்படுவது எல்லாம் அதிசயமா என்றால் வருடத்தில் 365 நாட்களில் திருவிழா நடைபெறப் போகும் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மற்றவர் கண்களில் இதுபோன்ற நாகங்கள் தென்படுவதில்லை ஏன்??????

2.பரந்துபட்ட ஆலய வீதியிலோ ஏனைய பல இடங்களில் தென்படாத நாகங்கள் அம்மனின் புனித இடங்களான மூலஸ்தானம் மற்றும் இராஜ கோபுரம் தீர்த்தகேணி இதில் மட்டும் அடியவர்கள் கண்ணில் தெரிவது எப்படி…..?????

3.கேணியில் நீர் குடிக்க வந்திருக்கும் என்ற சிலபேரின் கூற்றுப்படி பார்த்தால்
பாம்பு வருடத்தில் ஒரு தடவை மட்டுமா நீர் அருந்தும்
நீர் அருந்த நயினாதீவில் வேறு இடம் இல்லையா

4.மனிதர்கள் நடமாடும் இடங்களில் பாம்பு தென்படாது என்பார்கள்
ஆலய வீதியில் எந்த எந்நேரமும் துப்பரவு பணியில் ஈடுபடுபவர்கள்
கண்ணில் தென்படாத நாகம்
முக்கியமான சில தினங்களில் தென்படுவதெப்படி????

  1. தற்போதைய நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் கட்டிட அமைப்பின் படி பாம்புகள் உள் நுழைவது அவ்வளவு எளிதான விடயமல்ல
    எவ்வாறு உள்ளே பாம்புகள் தென்படுகின்றன

6.நாகம் பூக்கொண்டு வந்து வழிபட்டதாக வரலாற்றை நினைவுபடுத்தும் பாம்பு வடிவில் இருக்கும் பாம்புசுத்திக்கல் இதுவரை எந்த கடல் சீற்றங்களுக்கோ அல்லது இயற்கை அனர்த்தங்களுக்கோ முற்றாக சேதமடையாமல்
நிலைத்திருப்பது எப்படி….?????
7.பல சந்ததிகளுக்கே தெரியாத வன்னிமரத்தின் தோற்றம் இன்றுவரை நிலைத்திருப்பது எப்படி……????

  1. மகோற்சவத்தில் 11ம் திருவிழாவான கருட சர்ப்பத்திருவிழாவில் பாம்புசுத்திக்கல் மற்றும் கருடக்கல்லுக்கு பூசையிடும் போது மட்டும் கருடன் அவ்விடத்தில் காட்சி கொடுத்து வட்டமிடுவது எப்படி….????
    ஏனைய நாட்களில் அவை போன்ற காட்சி இடம் பெறுவதில்லை
    ஏன்????
    இவற்றுக்கு விடையில்லாத புதிரான புதிர் நயினாதீவு நாகபூசணி அம்மன் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை…..!!!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here